ஐயமிட்டுண் எழுச்சி வாரம் – நன்றி மற்றும் புதிய முயற்சி.
Aiyamiddun
July 7, 2025
admin
நன்றி & சாதனை
மீளாய்வு ஒன்றுகூடலில் இணைந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் எமது நன்றிகள். கடந்த 2 வாரங்களில் மட்டும் 15,892 மாணவர்கள் ஐயமிட்டுண் மூலம் பயனடைந்தனர். ஒரு உணவு விநியோகத்திகான சராசரி செலவு Rs.11.36 மட்டுமே!
📷 “ஐயமிட்டுண் உணவு வழங்கும் காட்சி”
4வது ஆண்டு – புதிய எழுச்சி!
ஐயமிட்டுண் தனது 4வது ஆண்டில் நுழைந்து “ஐயமிட்டுண் எழுச்சி வாரம்” எனும் சிறப்பு நிகழ்வை மேற்கொள்கிறது. மேலதிக தகவல்கள் இந்த வாரம் அறிவிக்கப்படும் – அனைவரும் தொடர்ந்து, இணைந்திருங்கள்!
📷 ஐயமிட்டுண் – மாணவர்கள் & நன்கொடையாளர்கள் நினைவுகள்.
நிதி நம்பிக்கை
நன்கொடையாளர்கள் நேரடியாக பாடசாலையின் SDC வங்கி கணக்கில் வைப்பினை மேற்கொண்டு, உணவு வழங்கல் நிதி எமது நிதிக் கட்டுப்பாடுகளுக்கு ஏற்பவே பயன்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.
சிறப்பு நன்றி – குட்டியபுலம் பாடசாலை
“ஓராயம்” அமைப்பு வழங்கிய Rs.220,000 பெறுமதியான Green House குட்டியபுலம் பாடசாலை மாணவர்களுக்கான வளர்ச்சியில் புதிய அத்தியாயம் ஆரம்பிக்கும்.
🎥✨ நிகழ்வு பதிவு: 🌟 “ஐயமிட்டுண் 🎉 மீளாய்வு ஒன்று கூடல் – நன்றி நிகழ்வு & எழுச்சி வாரத் தொடக்கம்”