
ஏராவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் கலந்துரையாடல்.
கிழக்கு மாகாண எல்லை கிராமங்களில் அமைந்துள்ள பழமையான பாடசாலைகளில் ஒன்றான ஏராவூர் விபுலானந்தா வித்தியாலயத்தில் இன்று முக்கியமான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடல், மாணவர் எண்ணிக்கையை ஊக்குவித்து உயர்த்துவதற்கும், பாடசாலைகள் மூடப்படாமல் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இக்கலந்துரையாடல் வலய கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஐயமிட்டுண் நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு கல்வி மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு